பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் படுகொலை!
Feb 4, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் படுகொலை!

Murugesan M by Murugesan M
Mar 6, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா விக்கிரவாண்டி வலசை கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவர் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் உத்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில், உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பழனிசாமியை உத்திரகுமார் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், பழனிசாமியின் தரப்பினர் பழிவாங்கும் விதமாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Tags: Tn newsபரமக்குடிLawyer murdered due to past enmity near Paramakudi!
ShareTweetSendShare
Previous Post

புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குகிறது : பிரதமர் மோடி

Next Post

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி!

Related News

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

Load More

அண்மைச் செய்திகள்

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies