பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார்.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டன்ற உறுப்பினருமான காயத்ரி தேவியின் மகள் திருமண வரவேற்பு விழா, சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், விழாவிற்கு காரில் வந்த சீமானை அண்ணாமலை சந்தித்து கைகுலுக்கி நலம் விசாரித்தார். அப்போது வலிமையாக இருங்கள் என அவருக்கு அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.