திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெள்ளகெவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரது மனைவி மேகலாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. முறையான சாலை வசதி இல்லாததால் மேகலாவை ஆபத்தான முறையில் கிராம மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அடர்ந்த வனப்பகுதி வழியாக தொட்டில் கட்டி பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேகலா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அடிப்படை வசதி இல்லாததால் அவசர காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.