காட்பாடி அருகே கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட திமுக நிர்வாகிகள் தேசிய கீதத்தை தவறாக பாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர் குழு தலைவராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளரும், தொழிலதிபருமான சாரதி பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் சாரதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தேசிய கீதத்தை பாடத் தெரியாமல் தவறாகவும், சிரித்தப்படியும் பாடினர்.
இந்நிலையில், தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் விதமாக பாடிய திமுகவினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.