டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது வீட்டில் மொத்தம் 37 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும், அதில் 11 கோடி ரூபாய் தீயில் கருகி நாசமானதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அலகாபாத் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.
கொலீஜியம் அந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.