தெலங்கானாவில் மன நோயாளி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார்.
மேட்சல் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஜடேஸ்வர் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் ரியாமரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த
மனநோயாளி சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, மன நோயாளியைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.