சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரும் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த முத்துக்குமார் என்பவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று பேச வேண்டும் என கூறினார். மரபை கடைபிடிக்காவிட்டால் அனுமதி வழங்கக் கூடாது எனக்கூறிய அவர், எதிர்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.