இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி நீலகிரி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் நீலகிரி, கேரள எல்லைப் பகுதியான நாடுகாணி, கல்லாறு உள்ளிட்ட 15 சோதனை சாவடிகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இந்த நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாளை ஒருநாள் முழு கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, விடுதிகள், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயங்காது என்பதால் சுற்றுலா பயணிகள் நாளை ஒருநாள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர வேண்டாம் என வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.