மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 12 மணி நேரத்தை கடந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
நள்ளிரவு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என எம்.பி-க்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து எம்.பி-க்கள் கொண்டு வந்த திருத்தங்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மசோதா மீதான வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். அதன்மூலம் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.