பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தருவதை ஒட்டி மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மார்ச் 6ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி மீனவர்கள் தங்கள் படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்க மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் படகுகளைக் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.