ரீல்ஸ் மோகத்தால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரீல்ஸ் எடுப்பதற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து, ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த இளைஞர் சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.