திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு லாரியை ஓட்டி வந்த கணேசன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.