சென்னையில் டேபிள் மின்விசிறியில் மின்சாரம் பாய்ந்ததில் 5-ம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடுங்கையூரைச் சேர்ந்த தங்கராஜ் – ரேவதி தம்பதியினரின் மகனான சூர்யா என்பவர் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக ரேவதி, தனது மகன் சூர்யாவை அழைத்துக் கொண்டு பட்டாளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் டேபிள் மின்விசிறியில் ஊக்கை வைத்து விளையாடிய சிறுவன் சூர்யா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.