இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மகாவீரரின் போதனைகள் நம் வாழ்வில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் பற்றி சிந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
அவரது அகிம்சை, கருணை மற்றும் அமைதி பற்றிய செய்தி தற்போது மிகவும் பொருத்தமானது என்றும், அவரது வாழ்க்கையையும் மரபையும் போற்றி, அவரது கொள்கைகளை பின்பற்றி நடப்போம் என எல்.முருகன் கூறியுள்ளார்.