திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க தேரோட்டத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி தங்க தேரில் எழுந்தருளிய நிலையில், சுவாமிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தேரோட்டத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.