கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியில் உள்ள பாதையை விரிவாக்கம் செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான முடவன் பொற்றை, விளாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு நீர்பிடிப்பு பகுதிகளைப் பயன்படுத்தி நகரப் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில் வேப்ப மூட்டுவிளை – வள்ள கடவு இடையேயான ஒற்றைப்பாதையை விரிவாக்கம் செய்து சாலை அமைத்துத் தர மக்கள் கோரிக்கை வைத்தனர்.