நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்குச் சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலை வந்தடைந்தது.
அப்போது, கொடிமரத்திற்கும் கொடிப்பட்டத்திற்கும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்கக் கொடியேற்றப்பட்டது.
பின்னர், கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.