கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குலசேகரத்திலிருந்து கோவில்பட்டி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திருவட்டாறு அருகே பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன பழுது நீக்குமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.