ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 10-ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கேசவன் என்பவர், குயவன்குடி சுப்பையா கோயில் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தீ குண்டத்துக்குள் தவறிவிழுந்து அவர் படுகாயமடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.