"பட்டா கொடுத்தும் பலனில்லை" : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே அரசு சார்பில் பட்டா வழங்கி 27 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்காமல் தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் முழு பின்னணி என்ன?… பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களாக வேலைபார்க்கும் இவர்கள்தான் இப்படி குமுறிக் கொண்டிருக்கின்றனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்களும், 20க்கும் மேற்பட்ட தினக்கூலி தூய்மை பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களில் நிரந்தர பணியாளர்களாக இருந்தவர்களில் சிலர் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் நிரந்தர வசிப்பிடம் இல்லாமல் கண்மாய் கரை ஓரங்கள், புறம்போக்கு பகுதிகளில் சிறு வீடுகள் அமைத்து அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களில் 53 நபர்களுக்குக் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தனியார் இடத்தைக் கையகப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்திற்கான தொகை உரிமையாளருக்கு வழங்கப்படாததால் அதில் அவர்களே கல்வி நிறுவனம் அமைத்து நடத்தி வருகின்றனர்.

இதனை அறியாத மக்கள் அங்குச் சென்று கேட்டபோது அவர்களை அதிகாரிகள் விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை நாடியுள்ளனர். தொடர்ந்து இடத்தின் உரிமையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்று இடம் வழங்குவதற்கான ஒப்புதல் ஆவணங்கள் ஆதி திராவிடர் நலத்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் இன்று வரை அதற்கான எந்தப் பதிலும் இல்லாததால் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

எதனால் தங்களுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என்கிற கோணத்தில் சிலர் சென்னை ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் சென்று முறையிட்டதுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். ஆனால் எந்தப் பதிலும் இல்லாததால் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த வருவாய்த் துறையினர் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அந்த இடங்களுக்கான பட்டாவை ஏற்பாடு செய்து தருவதாக எழுத்துபூர்வமாக எழுதிக் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர்.

27 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் இந்த மக்கள் வீட்டுமனை பட்டா கிடைத்து எப்போது விடிவு காலம் பிறக்கும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். 27 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கொடுத்த பட்டாவிற்கு தற்போதைய திமுக ஆட்சி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதும் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

Tags: DMKதிமுக அரசு"Giving a bond is of no use": Will the DMK government look back?பட்டா கொடுத்தும் பலனில்லை
ShareTweetSendShare
Previous Post

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

Next Post

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies