ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது - அவிழும் மர்ம முடிச்சுகள்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல இசைக் கலைஞர் ​​ஜூபீன் கார்க்கின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, அவரின் உறவினரும் அசாம் காவல்துறை துணை கண்காணிப்பாளருமான சந்தீபன் கார்க்கைக் கைது செய்துள்ளனர். ஜுபீன் கார்க்கின் மரண வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யபட்டுள்ளனர். அதனால், இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து வருகின்றன.

அசாம் மாநில கலாச்சார சின்னமாக விளங்கிய இசைகலைஞர் ஜூபீன் கார்க், அசாமில் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் இரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக இருந்த ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் சென்று நடத்திவந்தார். அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை சுமார் 38,000 பாடல்களைப் பாடி அசாம் மக்களின் அன்புக்கு உரியவராக இருந்தார்.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிங்கப்பூரிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அவரது உடல் அசாமில் மீண்டும் ஒரு முறை பிரேதப் பரிசோதனை செய்தபின், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஜூபீன் கார்க்கின் திடீர் மரணம் குறித்து சந்தேகங்களுக்கு விடை காண, எம். பி. குப்தா ஐபிஎஸ் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அமைத்துள்ளார்.

கூடுதலாக, கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் வைத்திருப்பவர்கள் அதனை விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப் பட்டது. இந்த மரண வழக்கில், முதலில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப் பட்டார்.

அடுத்து வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம் கனு மகந்தா இருவரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள சேகர் ஜோதி கோஸ்வாமி, திறமையான நீச்சல் வீரரான ஜுபின் கார்க் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணையில் கூறியுள்ளார்.

மேலும், சிங்கப்பூரில் பான் பசுபிக் ஹோட்டலில் தங்கியிருந்தபோது சித்தார்த் சர்மாவின் நடத்தை சந்தேகத்திற்கிடமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஷ்யாம் கனு மகந்தா நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். முன்னாள் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா மற்றும் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நானி கோபால் மஹந்தாவின் தம்பிதான் இந்த ஷ்யாம் கனு மகந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜூபின் கார்க்கின் உறவினரும் அசாம் காவல் துறை துணை கண்காணிப்பாளருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் ​ஜுபின் கார்க் நீரில் மூழ்கியதாகக் கூறப்படும் போது அந்தப் படகில் சந்தீபன் கார்க் இருந்ததாகக் கூறியுள்ள சிறப்பு புலனாய்வுத் துறை அந்தப் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன.

அசாம் கம்ரூப் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தீபன் கார்க் கைது ஜூபின் கார்க் மரண வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைத்துள்ளது.

இதற்கிடையே ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷ்யாம் கனு மகந்தா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags: Zubin Garg murder?: Assam DSP arrested in action - mysterious knots unravelingபிரபல இசைக் கலைஞர் ​​ஜூபீன் கார்க்கின் மர்ம மரணம்
Share
Tweet
SendShare
Previous Post

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Next Post

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies