நாமக்கல்லில் முதல்வர் மருந்தகம் வேண்டாம் என அளித்த மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டதாகத் தொழில் முனைவோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்கள், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன.
அதன்படி தொழில் முனைவோர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் மருந்தகங்களை கடும் நஷ்டம் காரணமாக நடத்த முடியவில்லை எனக்கூறி, தொழில் முனைவோர்கள் சிலர், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளரிடம் மனு அளிக்கச் சென்றனர்.
அப்போது அவர்களின் மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்து, திருப்பி அனுப்பியதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.