சேலம் பழைய பேருந்து நிலையத்தில் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு, இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவிக்கு 19 வயதான மோகன பிரியன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கல்லூரி மாணவியைத் தீவிரமாக காதலிப்பதாக மோகனப்பிரியன் கூறிய நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையே, கல்லூரி மாணவிக்குப் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த மோகன பிரியன், சேலம் பழைய பேருந்து நிலையம் வந்த கல்லூரி மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் தாக்கியுள்ளார்.
அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.