வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்த சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. போருக்கு அஞ்சி அண்டை நாடுகளான சாட், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், போரை நிறுத்த சர்வதேச நாடுகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஐ.நா கூறியுள்ளது.