தென்காசி ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா, நவம்பர் மாதம் 17-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கணேசன், ஆனந்த் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், பிணையில் வெளியே வந்த அவர்களை பட்டுராஜாவின் உறவினர்கள் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற ஆனந்தின் சகோதரர் குத்தாலிங்கத்தை, 4 பேர் கொண்ட கும்பல் தலையைத் துண்டித்து கொலை செய்தது.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ராமசுப்பிரமணியன், ஹரிஹரன், செண்பகம், மணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.