அதிமுக – பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் தமிழ்ஜனம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். அமித்ஷாவின் தமிழகம் வருகை முதலமைச்சரை பதற்றமடைய செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளதாகவும், ஊழலுக்காகவும் தேச விரோதத்திற்காகவும் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும் குறிப்பிட்டார்.