பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் உள்ள பாதுகாப்பு, விமானம் மற்றும் கடற்படை ஆலோசகர்களை இந்தியா திரும்ப பெறுவதாக தெரிவித்த அவர், பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 7 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விக்ரம் மிஸ்ரி,
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கெடு விதித்தார்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இனி விசா வழங்கப்படாது எனவும்,
பாகிஸ்தான் உடனான தூதரக உறவை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.