தற்போது நடக்கும் சண்டை மதங்களுக்கும் இடையிலானது அல்ல என்றும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கு இடையேயானது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதம் குறித்து கேள்வி கேட்ட பிறகு கொன்றனர் என்றும், இதுபோன்ற செயலை ஒரு ஹிந்து ஒருபோதும் செய்ய மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அரசாங்கம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்
நாட்டு மக்கள் அனைவரும் சோகமாக இருக்கிறார்கள் என்றும், மக்கள் மனம் கோபம் நிறைந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பேய்களை அழிக்க மகத்தான சக்தி வேண்டும் என்பதை சிலர் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறிய அவர், தற்போது அவர்களால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.
மேலும், தீய மக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
நீதியை மீட்டெடுக்க ராவணனை வதம் செய்வது அவசியம் என்பது போலவே, இன்று சில சக்திகளுக்கும் இதே போன்ற பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.