தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு விவசாயிகள் தலையில் மஞ்சப்பையை அணிந்து கொண்டு வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்தும், விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரியும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.