இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் முயற்சியில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 51 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
இதனைதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதே பாஜக அரசின் நிலைப்பாடு என்றும், இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் உள்ளதாகவும், அவற்றில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர்களின் திறனை அதிகரிக்க, எந்த உத்தரவாதமும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன்களை வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.