பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் தேசமே துக்கத்தில் உள்ளதுதாகக் கூறிய அவர், இந்தியாவில் அமைதி நிலவுவதை எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது எனக் கூறிய அவர், தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய பலம் என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாத சவாலை எதிர்கொள்ள நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.