இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஷிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இந்தியாவுடனான போருக்குத் தாயாராக இருப்பதாகவும், 130 அணு ஏவுகணைகள் இந்தியாவைக் குறிவைத்துக் காத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளதால், இந்தியாவும் போரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளைப் பல வகைகளில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்திற்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, பல முக்கிய பாகிஸ்தான் அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தாரைத் தனி விமானங்களில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பரவத் தொடங்கியதும், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப், ராணுவ தளபதி ஆசிம் முனிர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு புகைப்படத்தைப் பாகிஸ்தான் அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.