காலனி என்ற வார்த்தை ஒழிக்கப்படுமென்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து பேசிய பாஜக எம்.பி.வானதி சீனிவாசன், நூற்றாண்டு கடந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் கொள்கை, ஒரு கிராமத்தின் அத்தனை சமுதாயத்திற்கும் பொதுவான ஒரே கோயில் மயானம் இருக்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.
பொதுவான இலக்கினை கொண்டு சமூக கலாச்சார இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் செயல்படுவதாக கூறிய வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கையை ஒட்டிய முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.