பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு நாளை கூடுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், எல்லையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூடுகிறது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் நிலையில், இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.