நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை உலகளாவிய தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற யுகம் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்தும் கல்வி முறையை பாஜக அரசு நவீனமயமாக்குவதாகத் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை உலகளாவிய கல்வித் தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தீக்ஷா தளத்தின்கீழ் AI அடிப்படையிலான ’ஒரு நாடு ஒரு டிஜிட்டல்’ உள்கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு நாடு ஒரே சந்தா திட்டத்தின்கீழ் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களைப் பெறுவது எளிதாகி விட்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி,
திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை மட்டுமே இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் எனவும் கூறினார்.