கனடாவில் கான்கிரீட் சிலோ திடீரென இடிந்து விழுந்தது.
ஒன்ராறியோ, டொரன்டோ என கனடாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் பெரும்பாலான கட்டிடங்கள் வலுவிழந்துள்ளன. இந்த சூழலில், ஒன்ராறியோவில் உள்ள கான்கிரீட் சிலோ இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக அந்த பகுதியில் மக்களின் வரத்து அதிகமாக இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.