ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ரஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அம்மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபா என்பவரின் வீடு சேதமடைந்தது. இதில் அவர் உயிரிழந்தார்.
ராஜ்குமார் தாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜம்மு -காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அர்ப்பணிப்புள்ள அதிகாரியை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.