பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ராணுவத்திற்கு உதவத் தன்னார்வலர்கள் தேவை என பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பஞ்சாப் தலைநகரான சண்டிகரில் உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.
தங்களை இந்திய ராணுவத்திற்கு உதவும் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொள்ள வந்த இளைஞர்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்குக் கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தன்னார்வலர்களாக இணைவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாகவும், நாட்டிற்காகச் சேவை செய்ய அனைவரும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.