போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.