பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை எனவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
காஷ்மீர் குறித்த எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது ஒன்று மட்டுமே மீதமுள்ள ஒரே விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை எனவும், யாரும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை எனவும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.