‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டதை தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலை முன்னெடுத்தது.
அதற்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றிய நிலையில், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களை தாக்கி அழித்தது. இதனை முப்படைகளின் மூத்த அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தபோதும், பாகிஸ்தான் அரசு அதனை மறுத்து வந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளன.