பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாதுகாப்பு விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 4வது முறையாக நடைபெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராணுவத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.