இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை கொல்லப்பட்டவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாருக்கு 14 கோடி ரூபாய் பணம் கிடைக்கவுள்ளது. ஏனெனில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்கள் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.