பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கை CBI-க்கு மாற்றியது அதிமுக, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் நிச்சயம் மக்கள் திமுகவை ஏற்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.