இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக கூறவில்லை, உதவி மட்டுமே செய்தேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கத்தாரில் அமெரிக்க ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் வலுப்பெற்ற போது தான் போரை நிறுத்த உதவி செய்ததாக கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அசாதாரண சூழல் நிலவி வருவதாக கூறியுள்ள அவர், அது எல்லை மீறி போராக உருவெடுத்த போது பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர விரும்பி உதவி புரிந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.