ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூரில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கொடிகாத்த குமரனின் சிலைக்கு மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தியவண்ணம் ஊர்வலமாக சென்றனர். பிரதமர் மோடி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரது முகமூடிகளை அணிந்து ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியின்போது பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி ட்ரோன் மூலம் பறக்கவிடப்பட்டது.