அதிமுகவினர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பயத்தை உருவாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார்.
பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள இபிஎஸ், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த சோதனைகளால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் அனைத்து சோதனைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.