ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 9 பயங்கரவாத தளங்கள், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள நூர் கான், ரபிகியூ, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் ராணுவ தளங்கள் மீதும் பஸ்ரூர் ரேடார் தளம் மற்றும் சியால்கோட் விமான தளம் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் மிராஜ் போர் விமானத்தின் பாகங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.