கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஓவேலி சுண்ணாம்பு பாலம் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கேரளாவை சேர்ந்த இருவரை காரில் அழைத்துச் சென்று, ஆற்றங்கரையை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் கார் அடித்துச் செல்லப்பட்டு பாறைகளுக்கு இடையே சிக்கியது.
இதுகுறித்து அப்புகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி காரில் கயிறு கட்டி மூவரையும் மீட்டனர்.