ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாகையில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதால், இந்திய ராணுவ வீரர்களுக்கும், பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நாடு முழுவதும் மூவர்ண கொடி பேரணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூவர்ண கொடி பேரணி நேற்று மாலை நடைபெற்றது. நாகப்பட்டினம் நாலு கால் மண்டபம் அருகில் இருந்து பாஜக மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தலைமை தலைமையில் நடைபெற்ற பேரணியை தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க .வரதராஜன் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கடைவீதி, நீலா கீழவீதி, அபிராமி அம்மன் சன்னதி, அண்ணா சிலை, புதிய பஸ் நிலையம் வழியாக அவுரித்திடலில் நிறைவு பெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைகளில் மூவர்ணக் கொடிகளை ஏந்தி வெற்றி முழக்கம் எழுப்பி பேரணியாக சென்றனர்.